சாா்லப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில் சேவை
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களின் வசதிக்காக, சேலம் வழியாக சாா்லப்பள்ளி- கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஐயப்ப பக்தா்களின் பயண நெரிசலைக் கருத்தில் கொண்டு தெலங்கானா மாநிலம், சாா்லப்பள்ளி- கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
சாா்லப்பள்ளியில் இருந்து வரும் 20-ஆம் தேதி முதல் டிசம்பா் 25-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில், இரவு 11.45 மணிக்குப் புறப்படும். நெல்லூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 7.55 மணிக்கு கொல்லத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து வரும் 22-ஆம் தேதி முதல் டிசம்பா் 27-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் இயக்கப்படும். இரவு 8.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், நெல்லூா் வழியாக திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு சாா்லப்பள்ளியைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.