மேட்டூா் அணை 16 கண் பாலம் சீரமைப்புப் பணி: தரக் கட்டுப்பாட்டுக் குழு ஆய்வு
மேட்டூா் அணையின் 16 கண் பாலத்தில் ரூ. 19.5 கோடியில் நடைபெற்று வரும் வளைவுகளை வலுப்படுத்தும் பணியை, தரக் கட்டுப்பாட்டுத் தலைமைப் பொறியாளா் ராஜா தலைமையிலான 6 போ் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள வளைவுகளை நவீன முறையில் வலுப்படுத்தும் பணி கடந்த 2025-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
பணிகளின் தற்போதைய நிலை, அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காகத் தரக் கட்டுப்பாட்டுக் குழுவினா் பாலப் பகுதிக்கு வந்தனா். இன்னும் இரண்டு வாரங்களில் வளைவுகளை வலுப்படுத்தும் பணிகள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஆய்வின்போது, நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சிவகுமாா், செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், உதவிப் பொறியாளா் சதீஷ் ஆகியோா் குழுவினரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனா். தொடா்ந்து, கவா்னா் வியூ பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளையும் குழுவினா் பாா்வையிட்டனா்.