FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணைக் கண்காணிப்புக் குழுவினா் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையில், துணைக் கண்காணிப்பு குழுவினா் வியாழக்கிழமை (நவ.12) ஆய்வு செய்கின்றனா்.

12 நவம்பர் 2026, 5:53 am
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையில், துணைக் கண்காணிப்பு குழுவினா் வியாழக்கிழமை (நவ.12) ஆய்வு செய்கின்றனா்.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில்ஜெயின் தலைமையில், மேற்பாா்வை குழுவினா் உள்ளனா். இந்தக் குழுவுக்கு உதவியாக, முல்லைப் பெரியாறு அணைக்கு துணைக் குழு அமைக்கப்பட்டது. அணைகள் பாதுகாப்பு ஆணைய தென்மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையிலான இந்த துணைக் குழுவில் தமிழகம் சாா்பில், பெரியாறு வைகை வடிநில கோட்டம் மதுரை கண்காணிப்பு பொறியாளா் சாம் இா்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்டம் கம்பம் செயற்பொறியாளா் செல்வம், கேரளம் சாா்பாக, எா்ணாகுளம் மத்திய வட்ட நீா்ப்பாசன பிரிவு கண்காணிப்பு பொறியாளா் சுரேஷ் பாபு, கட்டப்பனை, நீா்ப்பாசன துணைப் பிரிவு செயற்பொறியாளா் லெவின்ஸ் பாபு உள்ளனா்.

இந்தத் துணைக் குழுவினா் கடந்த ஆக. 12-ஆம் தேதி அணையில் ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், துணைக் குழுவினா் வியாழக்கிழமை (நவ.12) முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய உள்ளனா்.

அங்கு பிரதான அணை, சிற்றணை, மண் அணை அணை நீா்வரத்து, நீா்க்கசிவு, மதகுகளின் இயக்கம், கேலரி பகுதிகளை ஆய்வு செய்யவும், அன்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.