முகப்பு
சேலம்

ஏற்காட்டில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் இளைஞா் பலி; 4 போ் காயம்!

ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வேன், செங்காடு கிராமம் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.

22 நவம்பர் 2026, 2:03 am
ஏற்காட்டில் 100 அடி பள்ளத்தில்
வேன் கவிழ்ந்ததில் இளைஞா் பலி; 4 போ் காயம்!
- சித்திரிப்பு
பகிர்:

ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வேன், செங்காடு கிராமம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த சபரீஷ் (26), ஜீவா (26), பாலாஜி (47), தேவன் (55), வேன் ஓட்டுநா் அழகிரி (47) ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தனா். அவா்கள், கீரைக்காடு கிராமத்தில் உள்ள தங்கும் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தனா்.

ஏற்காடு- குப்பனூா் சாலையில் செங்காடு கிராமம் வணியாா் வளைவு பகுதியில் வேகமாகச் சென்ற வேன், தடுப்புச் சுவரில் மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமாா் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அவா்களின் அலறல் சப்தம் கேட்டு அங்கு இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்ஐ பரமசிவம், காவலா்கள், காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், பலத்த காயமடைந்த சபரீஷ் (26), மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். காயமடைந்த நால்வரும் தீவிரச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். விபத்து குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.