முகப்பு

ஏற்காடு மலைப்பாதையில் பயங்கர விபத்து: 300 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பயணிகள் கார் விழுந்து ஒருவர் பலி

ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பயணிகள் கார் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து....

ஏற்காடு மலைப்பாதையில் பயங்கர விபத்து: 300 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பயணிகள் கார் விழுந்து ஒருவர் பலி
ஏற்காடு மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலாப் பயணிகள் கார். - எக்ஸ்
பகிர்:

சேலம்: வார இறுதிச் சுற்றுலா சென்றவர்களின் கார், ஏர்க்காடு - குப்பனூர் மலைப்பாதையில் சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்ததில், ஒருவர் பலியானார்; நான்கு பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், வணியார் பகுதிக்கு அருகில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு மலைச் சரிவில் சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலா அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும், பள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார். நான்கு பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியான இளைஞரின் உடல் உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

விபத்துக்குள்ளான காரில் இருந்த ஐந்து சுற்றுலாப் பயணிகளின் அடையாளம் மற்றும் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் மலைச் சாலையில் வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, அதிக வேகம் அல்லது மலைப்பாதையில் உள்ள ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை கையாள்வதில் ஓட்டுநருக்கு போதிய அனுபவம் இல்லாமலிருந்தது விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

A weekend sightseeing trip ended in tragedy on Saturday morning when a car carrying five tourists plunged nearly 300 feet into a deep gorge along the Yercaud–Kuppanur ghat road, killing one person...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.