FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

நேபாளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்து: 14 போ் உயிரிழப்பு

மலைப்பாதையில் இருந்து சுமாா் 300 மீட்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா்.

13 நவம்பர் 2026, 5:50 am
பகிர்:

நேபாளத்தில் சத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவா்களின் சிற்றுந்து, மலைப்பாதையில் இருந்து சுமாா் 300 மீட்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா்.

தலைநகா் காத்மாண்டிலிருந்து சா்காஹி மாவட்டத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது, பாக்மதி மாகாணத்தில் உள்ள மலைப்பாதையில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் பாய்ந்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.