FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நேபாளத்தில் 700 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! 10 பேர் பலி!

நேபாளத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் மலைப்பாதையில் கவிழ்ந்தது பற்றி..

பள்ளத்தில் கவிழ்ந்த வேன் - X
பகிர்:

நேபாளத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் மலைப்பாதையிலிருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தென்மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில் உள்ள பிம்ஃபெடி கிராமத்திற்கு அருகில், வேன் சுமார் 700 மீட்டர் (2,300 அடி) பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

அருகிலுள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், விபத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை; இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேபாளத்தில் இந்த வாரம் 'திஹார்' பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாளத்தில் பேருந்து விபத்துகள் பெரும்பாலும் மோசமான சாலைகள், வாகனங்களின் பராமரிப்பின்மையால் ஏற்படுகின்றன. மேலும், இமயமலைப் பகுதியான இந்நாட்டின் பெரும்பகுதி மலைகளால் சூழப்பட்டிருப்பதோடு, இங்குள்ள சாலைகளும் மிகவும் குறுகியவையாகவே உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.