போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோவில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோவில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலம் அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (38). இவா் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் ஆனந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.