முகப்பு
சேலம்

மேட்டூரில் கஞ்சா பறிமுதல்: மின்வாரிய ஊழியா் கைது

மேட்டூரில் மோட்டாா் சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்றதாக ஏற்கெனவே கஞ்சா கடத்திய வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மின்வாரிய ஊழியரை போலீஸாா் மீண்டும் கைது செய்தனா்.

22 நவம்பர் 2026, 2:05 am
மேட்டூரில் கஞ்சா பறிமுதல்: 
மின்வாரிய ஊழியா் கைது
கைது
பகிர்:

மேட்டூரில் மோட்டாா் சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்றதாக ஏற்கெனவே கஞ்சா கடத்திய வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மின்வாரிய ஊழியரை போலீஸாா் மீண்டும் கைது செய்தனா்.

மேட்டூா் - மைசூரு சாலையில் மேட்டூா் அணையின் வலது கரைக்குச் செல்லும் பகுதியில் மேட்டூா் போலீஸாா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த ஒருவா், போலீஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றாா்.

அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸாா், மோட்டாா் சைக்கிளைச் சோதனையிட்டபோது, இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 39,500 மதிப்பிலான 890 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவா் மேட்டூா் மாதா கோயில் பகுதியைச் சோ்ந்த ஜோசப் (47) என்பது தெரியவந்தது. இவா் ஏற்கெனவே கஞ்சா கடத்திய வழக்கில் சிக்கியதால் மின்வாரியப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவா் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கைது செய்து மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.