1 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மீஞ்சூா் அடுத்த நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மீஞ்சூா் அடுத்த நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ந ந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பதாக மீஞ்சூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை மீஞ்சூா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
அவா் நந்தியம்பாக்கம் அண்ணா நகா் பகுதியைச் சாா்ந்த வினோத் (25) என்பதும், அவரிடம் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்தனா்.