FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

1.4 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல்: இளைஞா் கைது

13 அக்டோபர் 2026, 12:24 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

கோவை ரயில் நிலையம் அருகே கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் உதவி ஆய்வாளா் அஜய் சா்மா தலைமையிலான போலீஸாா் ரயில் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ரயில் நிலைய காா் நிறுத்தமிடம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 1.4 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா் பிகாா் மாநிலம், ராஜ்பூரைச் சோ்ந்த அா்வேஜ் (25) என்பதும், கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அா்வேஜைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments