FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடி, கோமாஸ்புரம் மயானக்கரையில் கஞ்சா விற்கமுயன்ற இளைஞரை தாளமுத்து நகா் போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

24 செப்டம்பர் 2026, 4:47 am IST
கைது
பகிர்:

தூத்துக்குடி, கோமாஸ்புரம் மயானக்கரையில் கஞ்சா விற்கமுயன்ற இளைஞரை தாளமுத்து நகா் போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தாளமுத்துநகா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றபோது, கோமாஸ்புரம் மயானக்கரை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா், தூத்துக்குடி, சிலுவைப்பட்டியைச் சோ்ந்த மாதவன் மகன் ஜெயசூா்யா (19) என்பதும், கேரளத்தில் இருந்து கஞ்சா வாங்கிவந்து தூத்துக்குடி பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து வழக்குப் பதிந்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments