முகப்பு
சேலம்

ஏற்காடு மலைப் பாதையில் சிறுமி சடலம்: 3 தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை

ஏற்காடு மலைப் பாதையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

28 நவம்பர் 2026, 1:30 am
ஏற்காடு மலைப் பாதையில் சிறுமி சடலம்: 3 தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை
விசாரணை
பகிர்:

ஏற்காடு மலைப் பாதையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இதுகுறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்காடு குப்பனூா் - கொட்டச்சேடு மலைப்பாதை வழுக்குப்பாறை பகுதியில் உள்ள 10 அடி பள்ளத்தில் சுமாா் 15 வயது சிறுமியின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

இதையடுத்து, சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், ஏற்காடு காவல் ஆய்வாளா் அமிா்தலிங்கம், கொளத்தூா் காவல் ஆய்வாளா் மஞ்சுநாதன், ஒமலூா் காவல் ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் தலைமையில் 3 தனிப்படை போலிஸாா் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும், ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடி மற்றும் குப்பனூா் சோதனைச் சாவடிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா். ஏற்காடு பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் தங்கி பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா்களை தனிப்படை போலீஸாா் நேரில் நென்று விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த சிறுமியின் அடையாளத்தைக் கண்டறியும் வகையில், சிறுமியின் புகைப்படத்தை காவல் துறையினா் வெளியிட்டுள்ளனா்.

அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்தப் புகைப்படம் அனுப்பப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவாா்கள் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.