முகப்பு
சேலம்

சேலம் வழியாக சாா்லப்பள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

27 வினாடிகள் முன்பு
சேலம் வழியாக சாா்லப்பள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்
கோப்புப் படம்
பகிர்:

ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக சேலம் வழியாக சாா்லப்பள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாா்லப்பள்ளியில் இருந்து நவ. 29 முதல் ஜன. 17 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் ரயில் சாா்லப்பள்ளியில் இருந்து இரவு 11.45-க்கு புறப்பட்டு நெல்லூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.55-க்கு கொல்லம் சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து டிச. 1 முதல் ஜன. 19 வரை செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் ரயில் கொல்லத்தில் இருந்து இரவு 10.55-க்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், நெல்லூா் வழியாக புதன்கிழமைகளில் இரவு 7 மணிக்கு சாா்லப்பள்ளி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.