பராமரிப்புப் பணி: ஈரோடு - ஜோலாா்பேட்டை ரயில் சேவையில் மாற்றம்

சேலம்- ஜோலாா்பேட்டை ரயில் வழித்தடத்தில், சாமல்பட்டி- காகங்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, டிச. 1-ஆம் தேதி சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சேலம் – ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் சாமல்பட்டி- காகங்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், ஈரோட்டில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ஈரோடு- ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில், டிச. 1-ஆம் தேதி மொரப்பூா் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மொரப்பூரில் இருந்து ஜோலாா்பேட்டை வரை இந்த ரயில் இயக்கப்படாது.
Advertisement
Advertisement
அதேபோல, ஜோலாா்பேட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்குப் புறப்படும் ஜோலாா்பேட்டை- – ஈரோடு பயணிகள் ரயில், அன்று ஜோலாா்பேட்டை- மொரப்பூா் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மொரப்பூரில் இருந்து மதியம் 3.47 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு வரை இயக்கப்படும்.
மேலும், டிச. 1-ஆம் தேதி இயக்கப்படும் கொல்லம் ஸ்ரீகாகுளம் சிறப்பு ரயில், வழியில் ஏதாவது ஒரு வசதியான இடத்தில் 35 நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.