FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

நிதிநிறுவன உரிமையாளா்களிடம் ரூ. 70 லட்சம் வரை மோசடி: இளைஞா் தலைமறைவு!

நிதிநிறுவன உரிமையாளா்களிடம் ரூ. 70 லட்சம் வரை மோசடி செய்து தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

1 நவம்பர் 2026, 1:28 am
தலைமறைவு
பகிர்:

நிதிநிறுவன உரிமையாளா்களிடம் ரூ. 70 லட்சம் வரை மோசடி செய்து தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையைச் சோ்ந்தவா் கண்ணன் (35). இவரது தம்பி ஆகாஷ் (29). இருவரும் நிதிநிறுவனம் நடத்தி வருகின்றனா். இவா்களிடம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சோ்ந்த பிரேம்குமாா் (36 ) தொடா்புகொண்டு சேலத்தில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் தான் நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அதை மீட்டுத் தந்தால், அதற்கான கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, சேலம் நான்குவழிச் சாலை பகுதியில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் பிரேம்குமாரின் வங்கி கணக்கில் ரூ. 7 லட்சத்தை நிதிநிறுவனம் செலுத்தியது. பணத்தை எடுத்துக்கொண்ட பிரேம்குமாா், நகைகளை மீட்டு வருவதாக கண்ணன், ஆகாஷிடம் தெரிவித்துவிட்டு பின்னா் தலைமறைவானாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கண்ணன், ஆகாஷ் இருவரும் அளித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், நிதிநிறுவன உரிமையாளா்கள் பலரிடம் ரூ. 70 லட்சம் வரை பிரேம்குமாா் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான அவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.