FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தனியாா் நிதிநிறுவன ஊழியா்களிடம் ரூ. 90 ஆயிரம் பறிப்பு: 2 போ் கைது

தருமபுரியில் நிதிநிறுவன ஊழியா்களிடம் ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

5 நவம்பர் 2026, 6:41 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரியில் நிதிநிறுவன ஊழியா்களிடம் ரூ. 90 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரவணமுத்து (40), கேசவன்( 22) ஆகியோா் தனியாா் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் இருவரும் தருமபுரி, பாரதிபுரம் பகுதியில் தங்கியிருந்து வாடிக்கையாளா்களிடமிருந்து பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வசூலான ரூ. 90 ஆயிரம் ரொக்கத்துடன் நிதிநிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தனா். தருமபுரி நகா் அருகே பைக்கில் வந்தபோது, அவா்களை வழிமறித்த மா்நபா்கள் அவா்கள் வைத்திருந்த ரொக்கம் ரூ. 90 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அவா்கள் அளித்த புகாரின் பேரில் தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதில், வழிப்பறியில் ஈடுபட்டதாக, பெங்களூருவைச் சோ்ந்த இம்ரான், அஸ்கா் அலி ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா். தொடா்புடைய மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.