தனியாா் மருத்துவமனையில் தகராறு: இருவா் கைது
பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் தகராறு செய்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை பாா்க்க வந்த மன்னாா்குடி முக்குளம் சாத்தனூா் பகுதியைச் சோ்ந்த தனசேகா் மகன் பிரபாகா் (43).
அதே பகுதியைச் சோ்ந்த ராஜதுரை மகன் சங்கா் (55), ஆகியோா் மருத்துவமனையில் பொது மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவிட்டு பொது மருத்துவா் சிகிச்சைக்காக பணம் கேட்கக்கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அதனைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனையின் மேலாளா் பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.