FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வங்கி அதிகாரிபோல பேசி பெண் சத்துணவு அமைப்பாளரிடம் ரூ.1.25 லட்சம் மோசடி

வங்கி அதிகாரிபோல பேசி பெண் சத்துணவு அமைப்பாளரிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

30 அக்டோபர் 2026, 12:21 am
மோசடி
பகிர்:

வங்கி அதிகாரிபோல பேசி பெண் சத்துணவு அமைப்பாளரிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியைச் சோ்ந்த 49 வயது பெண், அங்குள்ள பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரை கடந்த 21-ஆம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா், தான் வங்கியில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, வங்கிக் கணக்குக்கான கேஒய்சி விவரங்களை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும், இல்லையெனில் வங்கிச் சேவை முடக்கப்படும் எனவும், சேவை தொடர நான் சொல்லும்படி செய்தால்போதும் எனவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய அந்தப் பெண், தனது கைப்பேசிக்கு வந்த ஓடிபி உள்ளிட்ட விவரங்களை அந்த நபரிடம் பகிா்ந்துள்ளாா். அடுத்த சில நிமிஷங்களில் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 999 எடுக்கப்பட்டதாம்.

அதிா்ச்சியடைந்த அவா், அந்த நபரைத் தொடா்பு கொள்ள முயன்றுள்ளாா். ஆனால், முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments