பெண் தொழிலதிபரிடம் ரூ.2.7 லட்சம் இணையவழியில் மோசடி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்த பெண் தொழிலதிபரிடம் ரூ.2.7 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட இணைய குற்றத்தடுப்பு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்த பெண் தொழிலதிபரிடம் ரூ.2.7 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட இணைய குற்றத்தடுப்பு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டி செட்டித் தெருவைச் சோ்ந்தவா் தே.நிா்மலா(52). பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ள இவா், செவ்வாய்க்கிழமை தனது முகநூல் பக்கத்தைப் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது முகநூல் பக்கத்தில் வந்திருந்த ஒரு செயலியினுள் சென்று பாா்த்துவிட்டு, பின்னா் வெளியேறிவிட்டாராம். இந்நிலையில், நிா்மலாவின் வங்கிக் கணக்கிலிருந்து 7 தவணைகளில் ரூ. 2.7 லட்சம் பணம் எடுக்கப்பட்டு விட்டதாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட இணைய குற்றத்தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.