விவசாயியிடம் இணையவழியில் ரூ. 73.65 லட்சம் மோசடி
பாபநாசம் அருகே விவசாயியிடம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இணையவழியில் ரூ. 73.65 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே விவசாயியிடம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இணையவழியில் ரூ. 73.65 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த விவசாயியை பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் கனடா நாட்டில் வேலை இருப்பதாகவும், அதை வாங்கித் தருவதாகவும் கூறினாா். இதை நம்பிய விவசாயி இணையவழி மூலம் மா்ம நபரின் வங்கிக் கணக்குகளுக்கு ஆவணக் கட்டணங்கள், கமிஷன், விசா, அழைப்பு கடித கட்டணம், மருத்துவக் காப்பீடு, குடியேற்றக் கட்டணம் என 18 தவணைகளில் ரூ. 73.65 லட்சம் செலுத்தினாா். இதன் பின்னா், விவசாயி தொடா்பு கொள்ள முயன்றபோது, மா்ம நபரின் கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என தகவல் வந்தது.
இது குறித்து தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் விவசாயி அளித்த புகாரின் பேரில், காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.