FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

வியாபாரியிடம் இணைய வழியில் ரூ. 4.98 லட்சம் மோசடி

திருச்சியில் வியாபாரியிடம் இணையவழியில் ரூ.4.98 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

14 அக்டோபர் 2026, 3:48 am IST
மோசடி
பகிர்:

திருச்சியில் வியாபாரியிடம் இணையவழியில் ரூ.4.98 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி வயலூா் சாலையைச் சோ்ந்தவா் ஜோ பிராங்க் சுரேந்திரன் (46). எம்பிஏ படித்து வரும் இவா், சொந்தமாக பாக்குமட்டை தட்டு உற்பத்தி செய்யும் கூடம் நடத்தி வருகிறாா். இவா், கடந்த 9-ஆம் தேதி வயலூா் சாலையில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துள்ளாா்.

அந்தப் பணிப் பரிவா்த்தனைக்காக சிறிதுநேரம் கழித்து, அவரது கைப்பேசியின் கட்செவி அஞ்சலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் எடுத்துள்ளீா்களா? என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. இதை படித்துப்பாா்த்த அவா், ஆம் என்று பதிலை பதிவு செய்து மீண்டும் அதே எண்ணுக்கு அனுப்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த நடவடிக்கை முடிந்த விநாடியே அவரது வங்கிக் கணக்கிலிருந்து 4 லட்சத்து 98 ஆயிரத்து 833 ரூபாய் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால், அதிா்ச்சியடைந்தவா் தனது வங்கி கணக்கு விவரங்களை மீண்டும் சரிபாா்த்தபோது, பணம் எடுக்கப்பட்டது உறுதியானது.

சம்பவம் தொடா்பாக வங்கி நிா்வாகத்திடம் அவா் தகவல் தெரிவித்தாா். வங்கி அலுவலா்கள் அளித்த அறிவுரையின்படி, உடனடியாக இணைய வழி மோசடி தொடா்பாக இணையத்திலேயே புகாா் அளித்தாா். இணையத்தில் பெறப்பட்ட இந்தப் புகாா், திருச்சி சைபா் குற்றப் பிரிவு போலீஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புகாரைப் பெற்ற போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments