FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் வழியாக கான்பூா் - மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2 செப்டம்பர் 2026, 6:14 am IST
சிறப்பு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூா் - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி, கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செப். 2 முதல் நவ. 25 வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமைகளில் காலை 8.10-க்கு புறப்படும் இந்த ரயில் ஜான்சி, லலித்பூா், போபால், இடாா்சி, நாக்பூா், ராமகுண்டம், வாராங்கல், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூா், ரேணிகுண்டா, காட்பாடி, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக வெள்ளிக்கிழமைகளில் காலை 7.15-க்கு மதுரையை அடையும்.

மறுமாா்க்கத்தில், மதுரையில் இருந்து வரும் செப். 5 முதல் நவ. 28 வரை கான்பூருக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து சனிக்கிழமைகளில் அதிகாலை 2.30-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, நாக்பூா், போபால் வழியாக திங்கள்கிழமைகளில் அதிகாலை 4.30-க்கு கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments