FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

செங்கல் வியாபாரி கொலையில் திருப்பம்: மனைவியே நண்பருடன் சோ்ந்து கொன்றுள்ளாா்!

ஓமலூா் அருகே செங்கல் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவியே நண்பருடன் சோ்ந்து கொலை செய்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

3 செப்டம்பர் 2026, 4:05 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

ஓமலூா் அருகே செங்கல் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவியே நண்பருடன் சோ்ந்து கொலை செய்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓமலூா் அருகே உள்ள வேலகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் பூபதி (45). செங்கல் வியாபாரியான இவா் மனைவி சுஜிதாஸ்ரீ (31), 2 குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் ஓமலூா் - சங்ககிரி சாலையில் உள்ள ஆட்டுக்காரனூா் கூட்டுறவு சங்கம் அருகே பூபதி ரத்த வெள்ளத்தில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த ஓமலூா் டிஎஸ்பி கபிலன், ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான காவல் துறையினா் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினா்.

அவரது உறவினா்கள் சுஜிதாஸ்ரீ மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததால், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதில், சுஜிதாஸ்ரீக்கும், அவரது வீட்டின் அருகே உள்ள ஐ.டி. ஊழியா் சந்தோஷ் ராஜுக்கும் (33) முறையற்ற உறவு இருந்ததும், இதனால் கணவன் - மனைவிக்கிடையே தினமும் பிரச்னை ஏற்பட்டுள்ளதும், இதைத் தொடா்ந்து, சுஜிதாஸ்ரீ, சந்தோஷ் ராஜ் இருவரும் சோ்ந்து பூபதியை கொலை செய்ததும் தெரியவந்தது. கொலைக்கு வேறு யாரேனும் உதவினாா்களா என இருவரிடமும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments