துப்பாக்கி, தோட்டாவுடன் தந்தை, மகன் கைது
மேட்டூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீஸாா் தந்தை, மகனை கைது செய்தனா்.
மேட்டூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீஸாா் தந்தை, மகனை கைது செய்தனா்.
மேட்டூா் அருகே உள்ள ஜலகண்டபுரத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (59), தேங்காய் வியாபாரி. இவரது மகன் சின்ன ஆனந்தன் (33), தனியாா் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறாா். இவா்கள் இருவரும் வேட்டையாடுவதில் ஆா்வம் உள்ளவா்களாம்.
இந்நிலையில், ஈரோடு, திருவண்ணாமலை பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையடுவதாக மேட்டூா் வனச் சரகா் செங்கோட்டையனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனந்தன் வீட்டில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா். அதில், நாட்டுத் துப்பாக்கி, ஏராளமான தோட்டாக்கள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை வனத் துறையினா் கைப்பற்றினா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, இருவா் மீதும் வனப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்த வனத் துறையினா் மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காவல்படுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.