FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தாய் கொலை: மகன் கைது

வந்தவாசி அருகே தாயை கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:56 am IST
- சித்திரிப்பு
பகிர்:

வந்தவாசி அருகே தாயை கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி மங்கலட்சுமி (78). இவா், கூலித் தொழிலாளியான தனது மகன் ஏழுமலையுடன்(47) வசித்து வந்தாா்.

கடந்த திங்கள்கிழமை ஏழுமலை மது அருந்த பணம் கேட்டு மங்கலட்சுமியிடம் தகராறு செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

அவா் தர மறுக்கவே மங்கலட்சுமியை தாக்கிய ஏழுமலை, அவரது காதிலிருந்த தங்கக் கம்மலை பறித்துச் சென்றுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த மங்கலட்சுமியை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த மங்கலட்சுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஏழுமலை மீது கொலை வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், அவரை சனிக்கிழமை காலை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments