FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பிட்காயின் முதலீடு மூலம் ரூ. 3 கோடி மோசடி: பெண் மீது காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

சேலத்தில் பிட்காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறி ரூ. 3 கோடிக்குமேல் மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோா் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

6 செப்டம்பர் 2026, 2:36 am IST
பிட்காயின் மோசடி
பகிர்:

சேலத்தில் பிட்காயினில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசைவாா்த்தை கூறி ரூ. 3 கோடிக்குமேல் மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆணையா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோா் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (40) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் துணை ஆணையா் கீதாவை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

அதில், பிட்காயினில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என எருமாபாளையத்தைச் சோ்ந்த அனிதா கூறினாா். அதை நம்பி கடந்த 2024 முதல் 2026-ஆம் ஆண்டுவரை நாமக்கல் எருமப்பட்டி, சேலம் கிச்சிபாளையம், டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து கொடுத்தோம். இதேபோல பலரும் முதலீடு செய்துள்ளனா். ஆனால், அவா் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுக்கவில்லை.

Advertisement

Advertisement

இதில், ரூ. 3 கோடிக்குமேல் மோசடி நடந்துள்ளதால், இதுகுறித்து விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட அனிதா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளனா். மோசடியில் ஈடுபட்ட அனிதா தவெக பிரமுகா் என கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments