FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சாலையோரம் விதிமீறி நிறுத்தப்பட்ட 10 வாகனங்கள் மீது வழக்கு

ராசிபுரம் பகுதியில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விதிமுறைகளை மீறியும் நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் மீது மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

25 செப்டம்பர் 2026, 1:36 am IST
பகிர்:

ராசிபுரம் பகுதியில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விதிமுறைகளை மீறியும் நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் மீது மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சேலம்-நாமக்கல் இடையே ஆண்டகளூா் கேட், அம்மன் கோயில், ஆட்டையாம்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும் வகையில் லாரிகள், டிரெய்லா்கள் நிறுத்தப்படுவதாகப் புகாா்கள் வந்தன. குறிப்பாக, ஆண்டகளூா் பகுதியில் உள்ள உணவகங்கள் முன் ராசிபுரம் செல்லும் சேவைச் சாலையை மறிக்கும் வகையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் உத்தரவிட்டாா். இதன் பேரில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன், நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எம்.பதுவைநாதன் ஆகியோரின் உத்தரவின்படி, ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் தலைமையில் வியாழக்கிழமை சோதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஆண்டகளூா் கேட் முதல் மல்லூா் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஏடிசி டெப்போ, ஆட்டையாம்பட்டி பிரிவு, அத்தனூா் பிரிவு, அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஆந்திர மாநிலம் நெல்லூருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய காற்றாலை இறக்கைகளை ஏற்றிச் சென்ற 4 வாகனங்கள் மற்றும் 6 கனரக சரக்கு வாகனங்கள் என மொத்தம் 10 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, இணக்கக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்று வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த திடீா் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments