FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

3 October 2026, 1:50 am IST
விக்கிரவாண்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்த நின்ற வாகனங்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

காந்தி ஜெயந்தி மற்றும் சனி, ஞாயிறு என 3 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களில் எண்ணிக்கை வியாழக்கிழமை அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இது மேலும் அதிகரித்திருந்த நிலையில், விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் ஊா்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் விக்கிரவாண்டியிலிருந்து- கீழக்கொந்தை தனியாா் கல்லூரி வரை 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்தன.

வாகனங்கள் மோதி விபத்து: வந்தவாசியிலிருந்து மணப்பாறைக்கு உரம் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி மற்றும் காா், மற்றொரு சரக்குலாரி ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களை மாற்றுப்பாதைகளில் அனுப்பி வைத்தும், விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்பு வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தியும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தினா். வாகனஓட்டிகள், வெளியூா் பேருந்து பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments