FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அடகுக்கடையில் நகை, பணம் திருட்டு: மேலும் 4 தனிப்படையினர் விசாரணை

மதுரை, அக். 8: சோழவந்தான் அருகே அடகுக் கடையில் நடைபெற்ற நகை, பணம் திருட்டுச் சம்பவம் தொடர்பாக 4 தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  நாகமலைப் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் தவுட்டுராஜன்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

மதுரை, அக். 8: சோழவந்தான் அருகே அடகுக் கடையில் நடைபெற்ற நகை, பணம் திருட்டுச் சம்பவம் தொடர்பாக 4 தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 நாகமலைப் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் தவுட்டுராஜன். இவர் கருப்பட்டி பகுதியில் அடகுக் கடை வைத்துள்ளார். கடையில் இருந்த 118 பவுன் தங்க நகைகள், ரூ.25,250 ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

 இதுதொடர்பாக சோழவந்தான் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. திருட்டு நடைபெற்ற அடகுக் கடையில் சுவர், மேஜைகள் உள்ளிட்டவற்றில் பதிவான கைரேகைகள் பழைய குற்றவாளிகளது கைரேகையுடன் ஒத்துப்போகிறதா என சரிபார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

 மேலும், தவுட்டுராஜனுடன் நெருங்கிப் பழகுவோர் குறித்தும் போலீஸôர் விசாரித்து வருகின்றனர். கடைக்கு அடிக்கடி வந்து செல்வோரிடமும் விசாரிக்க போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.

 இதற்கிடையே நகை திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து முக்கிய தடயம் கிடைத்துள்ளதாகவும், இதையடுத்து தனிப்படை போலீஸôர் வெளிமாவட்டங்களுக்கு விரைந்து சென்றுள்ளதாகவும் தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments