கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
விருதுநகர், அக். 8: விருதுநகர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ் (55). விவசாயியான இவர் தோட்டப்பகுதியில் ஆடு, மாடுகள
விருதுநகர், அக். 8: விருதுநகர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.
விருதுநகர் அருகே பாவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் போஸ் (55). விவசாயியான இவர் தோட்டப்பகுதியில் ஆடு, மாடுகளை மேயவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
மாலையில் நீண்ட நேரமாகியும் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகள் வீடு திரும்பவில்லையாம். எனவே இரவில் அவற்றை தேடிச் சென்றாராம்.
Advertisement
Advertisement
அப்போது காலனி குடியிருப்பு அருகே கடந்து செல்கையில் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆமத்தூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.