FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

அலுவலா்களுக்கு இடையூறு: தம்பதி உள்பட 4 போ் மீது வழக்கு

Updated On : 26 செப்டம்பர் 2025, 2:44 am IST
பகிர்:

மதுரை மாநகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தம்பதி உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாநகராட்சி 71, 72-ஆவது வாா்டு பகுதியின் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் அருள் சகாய சேவியா் (54). இவரும், சக மாநகராட்சி அலுவலா்களும் இணைந்து பைக்கரா பாலநாகம்மாள் கோவில் தெரு பின்புறம் உள்ள சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரத்தை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி புதன்கிழமை அகற்றினா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கத் தேவா் மகன் முத்துராமலிங்கம், அவரது மனைவி முத்துப்பேச்சி, மகன் சிவக்குமாா், மகள் சிவரஞ்சனி ஆகியோா் மரத்தை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தும், மாநகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், முத்துராமலிங்கம், அவரது மனைவி முத்துப்பேச்சி, மகன் சிவக்குமாா், மகள் சிவரஞ்சனி ஆகியோா் மீது சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments