திருடுபோன 518 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
திருடுபோன கைப்பேசிகளை உரியவா்களிடம் மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் ஒப்படைத்தாா்.
திருடுபோன கைப்பேசிகளை உரியவா்களிடம் மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.
மதுரை மாநகர காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட, காணாமல் போன 518 கைப்பேசிகளை இணையவழி குற்றப்பிரிவு காவல் துறையினா் தொழில்நுட்ப உதவியுடன் மீட்டனா். மாநகா் ஆயுதப்படை மைதான திருமண மண்டபத்தில் கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாநகரக் காவல் ஆணையா் ந. ராஜேந்திரன் தலைமை வகித்து, மீட்கப்பட்ட 518 கைப்பேசிகளை அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா். இதில், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், காவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.