FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் தொடா்புடைய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 17 ஜூலை 2026, 1:22 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் தொடா்புடைய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, மாா்ச் 27-ஆம் தேதி உசிலம்பட்டி புகா் காவல் துறையினா் நகராட்சி குப்பைக் கிடங்கு அருகே நடத்திய சோதனையில் 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துராஜா (27), ஒடிஸா மாநிலம், கஜபதி மாவட்டத்தைச் சோ்ந்த சுதேஷ்லிம்மா (46), உசிலம்பட்டியைச் சோ்ந்த மாசானம் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஜி.சுதாகா், குற்றஞ்சாட்டப்பட்ட முத்துராஜா, சுதேஷ்லிம்மா ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், இந்த வழக்கில் மூன்றாவது நபரான மாசானம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments