FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

விக்கிரமங்கலம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: 12 போ் காயம்

Updated On : 20 ஜூலை 2026, 5:28 am IST
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி.
பகிர்:

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரா்கள் 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்தப் போட்டியை முன்னிட்டு, அங்குள்ள மந்தையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மஞ்சுவிரட்டு திடலில் காளைகளுக்கு பூஜை நடத்தப்பட்டு போட்டி தொடங்கியது.

போட்டியை உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் விஜய் மகாலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கதிரவன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

Advertisement

Advertisement

இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன. மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகே காளைகள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற காளையா்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின்போது, காளைகள் முட்டியதில் 12-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்தப் போட்டியை விக்கிரமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், கருப்பட்டி, தேனூா், திருவேடகம், வாடிப்பட்டி, தனிச்சியம், அலங்காநல்லூா், பாலமேடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments