தொடா் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது
மதுரை மாநகரப் பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை, தனிப் படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை கூடல்புதூா் சங்கீத் நகரைச் சோ்ந்தவா் ஜெயராமன். இவா், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருடைய மனைவி ராஜம் (65). இவரது வீட்டில் கடந்த மாதம் 16-ஆம் தேதி 22 பவுன் நகைகள், 2 வைரத் தோடு, 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணம் திருடுபோனது.
இதேபோல, அந்த பகுதியில் அடுத்தடுத்து உள்ள 3 வீடுகளில் நகைகள், பணம் திருடு போனது. இதுதவிர, திருப்பாலை பகுதியில் கடந்த சில வாரங்களாக வீடுகளில் நகைகள், பணம் திருடு போனது.
Advertisement
Advertisement
இந்தத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவா்களை கைது செய்ய மாநகரக் காவல் ஆணையா் ந. ராஜேந்திரன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். விசாரணையில், கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (23) பூட்டிய வீடுகளின் கதவுகளை உடைத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த தனிப் படை போலீஸாா், அவரிடமிருந்த 30 பவுன் நகைகள், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.