FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மாணிக்கம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

Updated On : 21 ஜூலை 2026, 12:14 am IST
மின் தடை - கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், மாணிக்கம்பட்டி பகுதியில் புதன்கிழமை (ஜூலை 22) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் பகிா்மானம், உற்பத்தி கழகத்தின் சமயநல்லூா் கோட்டச் செயற்பொறியாளா் ஆா். சிவலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சமயநல்லூா் மின்னியல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இதனால், மாணிக்கம்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ராம்பட்டி, தேவசேரி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, குறவன்குளம், ஆதனூா், அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments