கொடைக்கானலில் ரூ.37 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் ரூ. 37 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் ரூ. 37 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கொடைக்கானல் நகர்ப் பகுதியான தந்திமேடு ஆனந்திகிரி குறுக்குப் பகுதியில், தனியார் பாதையை இப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இந்நிலையில், நகராட்சி சார்பில் ரூ. 37 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் குரியன் ஆப்ரகாம், நகராட்சி ஆணையர் சரவணன், அவைத் தலைவர் ஜான்தாமஸ், நகர அர்பன் வங்கி கூட்டுறவுத் தலைவர் ஆரோக்கியசாமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.