FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திண்டுக்கல் அருகே சிகரெட் பண்டல் கொள்ளை வழக்கு: வரிச்சியூர் செல்வம் கைது

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே ரூ.37 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே ரூ.37 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

   மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள். சிகரெட் மொத்த விற்பனை முகவராக உள்ளார். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே கடந்த 16ஆம் தேதி இவரை வழிமறித்த ஒரு கும்பல், ரூ. 2 லட்சம் பணம் மற்றும் ரூ.37 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை கொள்ளையடித்துச் சென்றது.

  இதேபோல், கடந்த ஜனவரி மாதம் சரக்குகளை ஏற்றிச் சென்றபோது, கொடைரோடு அருகே சிவபெருமாளை வழிமறித்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

  கொடைரோடு வழிப்பறி சம்பவத்தில், திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் கோபிநாத் பாண்டியன் கடந்த 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும், தாடிக்கொம்பு வழிப்பறி வழக்கிலும் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

  இதனிடையே, கோபிநாத் பாண்டியனுடன் இணைந்து செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜ்குமார் என்பவரையும் சில நாள்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர்.

  இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், வழிப்பறி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோபிநாத் பாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்த செந்தில்(37), கருப்புச்சாமி (39), தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த செல்லையா (36) ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

  மேலும், வழிப்பறி சம்பவத்தில் கோபிநாத் பாண்டியனின் முக்கிய கூட்டாளியான வரிச்சியூர் செல்வத்தை தேடும் பணியை போலீஸார் விரைவுப்படுத்தினர். இந்நிலையில், நெல்லை மாவட்டம், தென்காசி பகுதியில் பதுங்கியிருந்த வரிச்சியூர் செல்வத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments