FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா: கொடைக்கானலில் 668 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

கொடைக்கானலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 668 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கொடைக்கானலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 668 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 கொடைக்கானலிலுள்ள இளைஞர், இளம் பெண்கள் பாசறை சார்பில் டிப்போ பகுதியிலுள்ள தனியார் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில், கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு குடைகள், பெண்களுக்கு சேலைகள், தையல் இயந்திரங்கள், இளைஞர்களுக்கு சட்டைகள் என 668 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார்.

Advertisement

Advertisement

முன்னதாக பாசறை செயலர் வினோத் வரவேற்றர். அவைத் தலைவர் ஜான்தாமஸ் முன்னிலை வகித்தார். நகர் மன்றத் துணைத் தலைவர் எட்வர்ட் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஆரோக்கியசாமி, வார்டு செயலர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments