திமுக ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில், மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வார்டுகளில் இளைஞரணி நிர்வாகிகளை நியமிப்பதற்காக இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜாமணி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஹரிஹரசுதன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோ.ரவிசங்கர், ர.பதுருஸ்ஸமான், தி.ஆனந்தராஜ் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.