கொடைக்கானல் ஏரிச்சாலையில் சிறுத்தை பூனைக்குட்டி சடலம் மீட்பு
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை சிறுத்தை பூனைக் குட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை சிறுத்தை பூனைக் குட்டி மர்மமான முறையில் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் உள்ள தனியார் இடத்தில் சிறுத்தை பூனைக்குட்டி இறந்து கிடந்தது. இத்தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தை பூனைக்குட்டி சடலத்தைக் கைப்பற்றினர். சுமார் 2-வயது மதிக்கத்தக்க சிறுத்தை பூனைக் குட்டி இறந்தது எப்படி என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே கொடைக்கானல் அப்சர்வேட்டரி, பாம்பார்புரம் சாலைப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருவதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சிறுத்தை பூனைக்குட்டி இறந்து கிடந்ததால் அப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.