FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தாடிக்கொம்பு அருகே கோயில் உண்டியல் திருட்டு: 2 இளைஞர்கள் கைது

தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் 3 உண்டியல்களை திருடிச் சென்ற 2 இளைஞர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் 3 உண்டியல்களை திருடிச் சென்ற 2 இளைஞர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்பு சௌந்தராஜப் பெருமாள் கோயில் வளாத்திற்குள் கடந்த திங்கள்கிழமை புகுந்த மர்ம நபர்கள்,  தன்வந்திரி,  லட்சுமி நரசிம்மர்,  ஆண்டாள் சன்னதிகளிலிருந்த 3 உண்டியல்களை திருடிச் சென்றனர். திருடு போன 3 உண்டியல்களும் உடைக்கப்பட்டு தாடிக்கொம்பு அடுத்துள்ள கொடகனாற்றில் கிடந்தன. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
 இந்நிலையில், உண்டியல் திருட்டில் ஈடுபட்ட தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ராஜபாண்டி (20),  கோவிந்தராஜ் மகன் விசுவநாத் (18) ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments