கொடைக்கானலில் செவிலியரை தாக்க முயன்றவர் கைது
கொடைக்கானலில் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை செவிலியரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை செவிலியரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானல் பிலிஸ்விலா பகுதியைச் சேர்ந்தவர் விசுவநாதன். இவரது மகன் வடிவேல். ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக சோப் ஆயில் குடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது வடிவேல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தராமல் செவிலியர்களை தரக்குறைவாக பேசியும், தாக்கவும் முற்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனையிலுள்ள உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரி பாலாஜி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து வடிவேலை போலீஸார் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.