பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கடந்த
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளது:
அரசு உதவிப் பெறும் பள்ளிகளைப் பொருத்தவரை, பெற்றோர் ஆசிரியர் கழக நிதி, முன்னாள் படைவீரர் நலனுக்கான நிதி, குழந்தைகள் தின விழா கொடி, ஆசிரியர் தின விழா கொடி, பார்வையற்றோர் தினக் கொடி, காசநோய் வில்லைகள், பாரத சாரண சாரணியர் தினக்கொடி, வினாத்தாள் கட்டணம் ஆகியவற்றுக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.300 செலுத்த வேண்டும். இது தவிர கூடுதலாக பணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து எழுத்துப் பூர்வமாக, திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலகங்களிலும், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.