சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும்: சோனம் வாங்சுக் மனைவி பேச்சு
சமஸ்கிருதம் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என சோனம் வாங்சுக்கின் மனைவி பேசியது குறித்து...
சமஸ்கிருதம் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ தெரிவித்துள்ளார்.
இந்தியர்களின் மனதில் காலனித்துவ நீக்கம் என்ற தலைப்பில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உடனான கலந்துரையாடலில் கீதாஞ்சலி இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து காணொலி வாயிலாகப் பேசிய அவர், இந்தியாவில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் பெருமைகள் குறித்துப் பேசினார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது, ''ராஜரிஷி குறித்து இந்தியாவில் பேசுகிறோம். இந்திய ரிஷிகளுக்கு ஒலியின் வேகம் குறித்து தெரிந்திருந்தது. பிதாகரஸ் தேற்றம் நிறுவப்படுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்னோர்களுக்குத் தெரிந்திருந்தது. நாலந்தா பல்கலைக் கழகத்தில் இருந்த 9 மில்லியன் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் மிகவும் அவசியமானது. ஹிந்து மதத்திற்கு மட்டுமல்ல, முன்னோர்களின் வரலாற்றுக்கு அவசியமானது'' எனக் குறிப்பிட்டார்.
இந்திய நிலப்பரப்பில் ஹிந்துத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு அறிவியல் கூற்றுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இதனால், சமஸ்கிருதம் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
Sanskrit should be made the national language Sonam Wangchuk's wife Geetanjali Angmo
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.