FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கொடைக்கானலில் தொடர் மழை: பீச்சஸ் பழங்கள் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில்  பீச்சஸ் பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

கொடைக்கானலில்  பீச்சஸ் பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல் பகுதிகளான அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை,சின்னப்பள்ளம், வில்பட்டி, செண்பகனூர், பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் ஊடுபயிராக பிளம்ஸ், பீச்சஸ், மரத்தக்காளி, பேஷன் புரூட் போன்ற பழவகைகள் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக  பெய்த மழையால் பீச்சஸ் பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட பழங்கள், கொடைக்கானல் பழக்கடைகளுக்கு அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன.  
ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. 
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பீச்சஸ் பழத்தை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து கொடைக்கானல் பழக்கடை வியாபாரிகள் கூறியது: கொடைக்கானல் சீசன் காலங்களில் மட்டுமே பீச்சஸ் பழம் விளையும். 
இந்த பழம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. அதனால் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments