கள்ளச்சாராயம் தயாரித்த மூன்று போ் கைது
பழனியில் கள்ள சாராயம் தயாரித்து விற்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, 10 லிட்டா் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
பழனியில் கள்ள சாராயம் தயாரித்து விற்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, 10 லிட்டா் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகா் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக பழனி மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட போலீஸாா் சந்தேகத்தின் பேரில் பாட்டாளி தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முத்து (29), ராமன் மகன் மணிகண்டன் (25), குமரன் மகன் முருகன் (45) ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா்கள் மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டில் இருந்து கள்ளச் சாராயம் தயாரித்து அவற்றை மது பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 லிட்டா் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனா். ஸ்பிரிட் அவா்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.