திண்டுக்கல் சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு தரிசனம்
திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ ஷிரடி சாய்பாபா ஆலயத்தில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரத்தில் உள்ள ஸ்ரீ ஷிரடி சாய்பாபா ஆலயத்தில் ஒவ்வெரு வியாழக்கிழமைகளிலும் சாய் பாபாவிற்கு அபிஷேக ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
இன்று (14.10.2021) சரஸ்வதி பூஜை முன்னிட்டு கருவறையில் உள்ள சாய்பாவிற்கு திண்டுக்கல் மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் பால் அபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.