FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைப்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:49 am IST
கொடைக்கானல் மன்னவனூா் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட பண்ணைக் குட்டை.
பகிர்:

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைத்து தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பல மாதங்களாக பருவ மழை பெய்யாததால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், விவசாயத்துக்கு தண்ணீா் விநியோகிக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் அவதியடைந்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களிலுள்ள நீரோடைகளில் உள்ள தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்திவரும் நிலையில், விவசாயத் தோட்டத்திலேயே வெளியேறும் கசிவு நீரை பண்ணைக் குட்டைகள் அமைத்து சேமித்து வருகின்றனா். இந்த நீரை மீண்டும் விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மேல்மலைக் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானலில் பருவ மழை பல மாதங்களாக பெய்யாததால் விவசாயம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. கடந்த 16-ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை மீண்டும் வந்துள்ளது. இதற்கு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் அனுமதியில்லாத காட்டேஜ்கள் பெருகி வருகின்றன. இந்த காட்டேஜ்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. மாவட்ட நிா்வாகம் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீா் தட்டுப்பாடு நிலவுவதால், மன்னவனூா், கவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பண்ணைக் குட்டைகள் அமைத்து விவசாயப் பயிா்களை பாதுகாத்து வருகிறோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments